சிட்லபாக்கம் திமுகவுன்சிலர் பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் […]
சிட்லபாக்கம் 43வது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் பாபு தெரு பூங்காவில் புதியதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன

அவற்றின் தரத்தை மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவர் உபகரணங்களை பதிக்கும் பணி தொடங்கிய போது எடுத்த படம்
திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
இந்தியா கூட்டணியின் தி.மு. கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிட்லபாக்கம் 43வது வட்ட கழகத்தின் சார்பாக மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், 43வது வட்ட கழக செயலாளர் சதீஷ்குமார், வட்ட நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த போது…
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு எம்.பி சிட்லபாக்கம் பகுதியில் குடியிருக்கும் நலசங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் சர்வமங்களா நகர் சங்கத்தினரும் கலந்து கொண்டு தெரு நாய்கள், மாடுகள் பிரச்சனை, சிட்லப்பாக்கம், செம்பாக்கம் சாலை போக்குவரத்து நெரிசல், செம்பாக்கம் ஏரி தூய்மையாக்குதல், பச்சை மலை மழை நீர் கால்வாய் நீர் ஏரிகளுக்கு வர வேண்டிய கோரிக்கை அனைத்தையும் டி.ஆர்.பாலுவிடம் மனுவாக கொடுத்தனர்.
சிட்லபாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

இதனை தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கேள்வி எழுப்பினார்.. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா இதனை பரிசீலித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு,.எஸ்.ஆர்.ராஜா எம்.எல் ஏ வழிகாட்டுதலின் படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் இது விநியோகிக்கப் படுகின்றது. பாலாற்றுத் தண்ணீர் […]
சிட்லபாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பரிமளா சிட்டிபாபு, இ.மனோகரன், பா.பிரதாப், ஆர்.கே.புரம் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் லயன் சங்கம் சார்பாக தலைவர் புகழேந்தி தலைமையில் 324L மாவட்டம் முன்னாள் உடனடி ஆளுநர் சி.ஜெகன் ஏற்பாட்டில்

பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிட்லபாக்கம் கலைவாணர் பூங்கா மற்றும் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் மேலும் முக்கிய தெரு ஓரங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை சுற்றி இரும்பு கம்பிகளிலான வேலிகளை உடனடியாக வைத்து பாதுகாப்புடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் செம்பாக்கம் பேரூர் திமுக செயலாளர், அவைத்தலைவர், மற்றும் பேரூராட்சி தலைவர் சந்திரன் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு

அவரது நினைவு இல்லத்தில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மற்றும் சந்திரனின் துணைவியாரும் தாம்பரம் மாநகராட்சி 39 வது வார்டு மாமன்ற உறுப்பினருமாகிய கிரிஜாசந்திரன் இளைய மகன் ஜெயபிரவீன் அவருடைய உருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செம்பாக்கம் பகுதி திமுக பலர் திரளாக கலந்து கொண்டனர். மாடம்பாக்கம் அர்ஷா கார்டன் பிரதான சாலையில் ஆட்டோ நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. வேளச்சேரி பிரதான சாலை மகாலட்சுமி நகர் அலுவலகம் அருகிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் […]
சிட்லபாக்கம் 43-வது வார்டு இராமலிங்க அடிகளார் தெருவில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் குப்பையும் கூடமாக புதர் மண்டியும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது

இந்த இடத்தை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி. ஜெகன் தனது சொந்த முயற்சியால் ஜேசிபி வாகனத்தை வைத்து சுத்தம் செய்தார் சுத்தம் செய்த பின் இந்த இடத்தை அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் மற்றும் பொழுதுபோக்காகவும் பயன்படுத்தி வந்தால் மீண்டும் இந்நிலைமை ஏற்பாடாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினரை அப்பகுதிவாள் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.