ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் காலமானார்

Bishop Esra Sarugunam – இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம் காலமானார்… சென்னை – ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் காலமானார்… அவரது உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

சிலுவை வடிவ தேவாலயம்

இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும். கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் அம்காரா நகரில் லலிபெலா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த புனித ஜார்ஜ் தேவாலயம். இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் ஒருவித ஒன்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில், கெம்ரே மெஜ்கல் லலிபெலா அரசின் கீழ் இந்த தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த […]

கேரள முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. 41 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் உயிர் இழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 5 நபர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு துறை ஏடிஜிபி குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணைக்கு தலைமை வகிப்பார். 20 பேர் அடங்கிய பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் 17ம் நூற்றாண்டு தேவாலயம் தகர்ப்பு

உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள 17ம் நூற்றாண்டு தேவாலயத்தை குண்டு வீசி தகர்த்துள்ளது. தேவாலயத்தின் கட்டடமும், உள்ளே இருந்த சிலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கலாச்சாரத்தை சிதைப்பதை மன்னிக்க முடியாது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று உக்ரைன் கூறியுள்ளது.