குரோம்பேட்டை ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நவசக்தி துர்கை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபா தாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அம்மனுக்கு வளையலால் சிறப்பு பந்தல் அமைத்தது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன […]

குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் போதையால் தவழ்ந்து சென்ற வாலிபர்

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் நடக்க முடியாமல் பேருந்து வரும் வழியில் தவிழ்ந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானா பொதுமக்கள் பயண்படுத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் பலர் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து வரும் வழியில் படுத்து […]

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் முடிச்சூர் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த மாநகராட்சியின் தனியார் ஒப்பந்தத் தூய்மைப்பணியாளர் தர்மண்ணா உடல் வைக்கப்பட்டுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, அன்னாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்

நாராயண மண்டலி விழா

குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள நாராயண மண்டலி மகளிர் குழு 17வது நாராயணீய சப்தாஹத்தை கொண்டாடுகிறது. நேற்று தொடங்கிய விழா 16 ஆம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை விழா நடைபெறுகிறது. இதில் மகளிர் அனைவரும் கலந்து கொண்டு குருவாயூரப்பன் அருளை பெறும்படி நாராயண மண்டலி மகளிர் குழு வேண்டியுள்ளது. தொடர்புக்கு 97898 04463

ஆடி கிருத்திகை முன்னிட்டு அஸ்தினாபுரம் ஸ்ரீ நவ பாசன தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆறுபடை வீடு முருக பக்தர்கள் சேவா சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது

இவ்விழாவில் கண்ணன், நாகராஜன், கிரி, பாபு, ரமேஷ், சண்முகம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது

இந்த விழாவில் மாவட்டத்தின் ஆளுநர் ஏ.டி ரவிச்சந்திர ஆதித்தன் நிவிஜி கே.எம்.ஜே. அசோக், வட்டாரத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கே.சந்திரசேகர், மாவட்டத் தலைவர்கள் எம்.ஜெயபால், எல்.ஹரிகுமார், சங்கத்தின் தலைவர் ஆர்.வி சங்கர், செயலாளர் ஏ.செந்தில்குமார், உறுப்பினர்கள் வீரப்பன், சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சேவை திட்ட ஏற்பாடுகளை சங்கத்தின் உறுப்பினர்கள் சிங்கதுரை, ஆனந்தராஜ் சுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.

குரோம்பேட்டை MIT அருகே அமைந்துள்ள Home Finders Court Flat வளாகத்தில் உள்ளே அமைந்துள்ள சர்வ மங்கல ஐஸ்வர்ய விநாயகர் கோவிலில் 23 ஆம் வருடம் ஏக தின இலட்ச்சார்ச்சனை தலைவர் அலமேலு பாட்டி, உபதலைவர் ராதா மாமி, பார்த்தசாரதி மாமா மற்றும் கோயில் கமிட்டி ஸ்ரீமதி அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது

அன்றைய தினம் மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் ருத்ரயாழ் இசை மற்றும் நுண்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் வளாக கலைஞர்கள் வழங்கும் குரலிசை, வீணையிசை, கீபோர்ட் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி, அதை அடுத்து உற்சவமூர்த்தி அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது

சமூக சேவகர் வி.சந்தானம் தலைமை ஏற்றார். மீனாட்சிசுந்தரம், அட்வகேட் ராமதாஸ், ராமசுப்பு, மோகன், ராமகிருஷ்ணன், பழனி, சேது, தேவராஜ் கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ், சிராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.