ஆசிரியர் தின விழாவையொட்டி குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர்

10, 12-ம் வகுப்பில் அய்யாசாமி பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை பெற்றதை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. பிறகு ரீடிங்டன் லிமிடெட் கம்பெனி பள்ளிக்கு 20 டேபிள்களும் 60 சேர்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த கம்பெனியின் நிர்வாகி வெங்கடாச்சாரி இந்த உதவியை செய்தார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானத்தின் தலைமையிலும் தாளாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்தது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்றதற்கு விருது வழங்கினர்.

ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்த உதயநிதி

குரோம்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.43.74 கோடியில் நடைபெறும் ராதாநகர் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி.,-27 அமைந்துள்ள பகுதியில் சுரங்கப் பாதை 2008ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த […]

மனவளக்கலை மன்ற விழா

குரோம்பேட்டை ராதா நகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் குடும்ப உறவை மேம்படுத்தவும், கணவன் மனைவி நட்பின் புனிதத்தையும் போற்றக்கூடிய மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்றது. ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள செல்வம் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இசை அமைப்பாளர் சத்யா தம்பதியினர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் தம்பதியினர் சென்னை சில்க்ஸ் ரவிசங்கர் தம்பதியினர், மயில் முருகன் தம்பதியினர், சம்பத் குமார் தம்பதியினர் ரத்னம் தம்பதியினர் கலந்து […]

குரோம்பேட்டை யூனிட்டி அரிமா சங்கம் சார்பாக நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் மாவட்ட அரிமா ஆளுநர் ஏ.டி.ரவிச்சந்திர ஆதித்தன் கலந்துகொண்டார்

உடன் அரிமா சங்க நிர்வாகிகள் எம்.ஜெயபால், கே.எம்.ஜே.அசோக், சுந்தர்ராமன், எம்.ஐ.டி.விஜய், சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அஸ்தினாபுரத்தில் புதிய பாலி கிளினிக் திறப்பு

அஸ்தினாபுரத்தில் லக்‌ஷயா என்ற புதிய பாலி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள லக்‌ஷயா பாலி கிளினிக் தற்போது குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் புதிய கிளையை திறந்துள்ளது. அஸ்தினாபுரம் பெரியார் சாலையில் பிஎஸ்என்எல் எதிரே இந்த கிளினிக் அமைந்துள்ளது. லக்‌ஷயா பாலி கிளினிக்கை திமுக பகுதி செயலாளர்ஏ.கே.கருணாகரன் மாமன்ற உறுப்பினர் திருமதி மகாலட்சுமி கருணாகரன் திறந்து வைத்தனர். மருத்துவ இயக்குனர் டாக்டர்.சித்ரா மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் அவர்களை வரவேற்றனர்.