புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரியின் பாஜக தலைவராக சாமிநாதன் இருந்துவருகிறார். இந்த நிலையில், சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார். புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகலாந்து, புதுச்சேரியின் பாஜக மாநில தலைவர்கள் […]
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், எம்ராய்டரி பிரிண்டிங் ஆலைகள் கதவடைப்பு போராட்டம்

தமிழக மின்சார வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் , மல்டி இயர் டாரிப் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள், சாலை ஆலைகள் மற்றும் 19 சங்கங்கள் ஆதரவளித்தன. இந்த நிலையில், […]
முதல்வர் ஸ்டாலின் காரை வழிமறிக்க முயன்ற பிஆர் பாண்டியன் கைது..

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பிஆர் பாண்டியன் திடீரென தமிழக முதல்வர் காரை வழிமறிக்க முயன்றதை அடுத்து அவர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. காவிரி நீர் பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக விவசாயிகளும் காவிரிகள் தண்ணீர் விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்து கர்நாடக விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து […]
குரோம்பேட்டையில் சாக்கடையில் மிதக்கும் நடேசன் நகர் | டெங்கு பரவும் அபாயம்

குரோம்பேட்டை நடேசன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் பல இடங்களில் உள்ள கழிவுநீரும் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுகிறது.தாம்பரத்தில் மழை பெய்த போது கூட மற்ற பகுதிகளில் மழை நீர் உடனடியாக வடிந்துவிட்டது. ஆனால் இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் காணாமல் போய்விட்டதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி […]
Chrompet 24 September 2023
ராதா நகர் சுரங்கப்பாதை.. விரைந்து முடிக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

2010 ம் ஆண்டு துவங்கிய ராதாநகர் ரெயில்வே சுரங்கபாதை பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டப்பட்டது. 2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் ரெயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காகவும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை குறைக்கும் விதமாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் […]
குரோம்பேட்டை ஸ்ரீ சரணாகதி சேவா டிரஸ்ட் மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கம்

குரோம்பேட்டை ஸ்ரீ சரணாகதி சேவா டிரஸ்ட் மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான சேர்கள் ‘ஸ்டுல் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவைகளை துணை தலைமை மருத்துவர் டாக்டர் காமேஷ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் வி.சந்தானம் தலைமையேற்று நடத்தினார்.
படத்திறப்பு விழா

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் பக்தஜன சபையின் முன்னாள் தலைவர் தெய்வத்திரு டி.என்.குருநாதன் அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா 10/9/2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் சபையின் அன்னதான கூடத்தில் நடைபெற்றது. சபையின் மூத்த உறுப்பினர் ஆர்.லட்சுமணன் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் கே.ரமேஷ், ஜி.எஸ்.டி ரோடு நியூஸ் ஆசிரியர் கி.முருகானந்த ஆதித்தன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். சபையின் நிர்வாகிகள் ஆர்.வரதகவுண்டர், ஆர்.சத்தியசேகரன், சி.எஸ்.முரளி மனோகரன், கே.தியாகராஜன், எச்.கார்த்திகேயன் பி.பாலச்சந்தர் மற்றும் நகர் […]
குரோம்பேட்டை நடேசன் நகரில் காணாமல் போன மழை நீர் கால்வாய்

குரோம்பேட்டை நடேசன் நகர் தாலுகா ஆபிஸ் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மழை நீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 23, நடேசன் நகர் பகுதி.இங்கு இருந்த மழைநீர்கால்வாய் கடந்த 10 ஆண்டாக மறைந்து விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு துயரங்களை அனுபவிக்கிறார்கள்.அப்பகுதி நலச்சங்கம், இணைப்புமையம் எடுத்த எந்த முயற்சிக்கும் மாநகராட்சி சார்பில் முறையான நடவடிக்கை இல்லை..அதிகாரிகள் வந்து பார்ப்பதும், நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வதும் தொடர் நிகழ்வாக […]
குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராம சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் வேத விற்பனர்களும் பட்டாச்சாரியார்களும் விமான கோபுரங்களுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு ஆலயத்தில் அமைந்திருக்கும் பரிவார மூர்த்தி களுக்கும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாதாரனை செய்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து திறனான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் […]