குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட்டில் விரிசல்

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே கேட்டில் ஒரு பகுதியில் தீடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என போர்டு வைக்கப்பட்ட நிலையில் அந்த கேட்டை கடக்க முறபட்ட வாகன ஓட்டிகள் 2 சுற்றிசெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. முக்கிய நேரத்தில் முடியதால் கேள்வி எழுப்பினார்கள். இதனால் அறிவிப்பு பலகையை ரெயில்வே பணியாளர்கள் கழட்டி சென்றனர். இதனால் ரெயில் கடந்தவுட் கேட் திறக்கும் என எதிபார்த்த வாகன ஓட்டிகள் திருப்பி சென்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும் அபராதம் இன்றி மின்சாரம் செலுத்தலாம் என்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430 மணி அளவில் கடந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் […]

பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!

பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார். அடையார் ஆற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் […]

தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு..!!

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க, மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது; மழை பாதிப்பு: கார்களை பழுது பார்க்க சிறப்பு ஏற்பாடுசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள டீலர்கள் மூலம் கார்களை பழுது பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் குறுஞ்செய்தி மூலமாகவும் கார்களின் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது. கார்களை உரிமையாளர்களின் வீடுகளில் இருந்து சர்வீஸ் மையங்களுக்கு எடுத்துச் செல்ல […]