குரோம்பேட்டை பாரதிபுரம், ஆண்டாள் திருப்பாவை திருவெம்பாவை நகர்வல குழு 11 ஆம் ஆண்டை முன்னிட்டு அதிகாலையில் ராதா நகர் ராமசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பஜனைகள் பாடி குழுவாக வந்த போது எடுத்த படம்
Chrompet 31 December 2023
வெள்ள நிவாரண தொகையை ஏரி புனரமைப்புக்கு தந்த வழக்கறிஞர்
குரோம்பேட்டை பாரதிபுரம் சம்மந்தம் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் ராமதாஸ். இவருக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது. அவர் அதனை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரி புனரமைப்புக்கு வழங்குவதாக அறிவித்தார். இதற்கான காசோலையை அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் சொர்க்கவாசலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் மேலும் அதிகாலையிலேயே புருஷோத்தமநகரில் கருட வாகனத்தில் வீதி உலாவந்தபோது எடுத்தபடம்.
Chrompet 24 December 2023
குரோம்பேட்டை காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் அரசு நிவாண பணம் 6 ஆயிரத்தை பாதிக்கப்பட்வர்கள் பெற்றுசென்றனர்

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட குரோம்பேட்டை ராதநகர், சாந்திகாலணி, காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் புயல் வெள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் உடமைகளும் சேதமடைந்தது, இந்த நிலையில் குரோம்பேட்டை காந்திநகரில் நியாவிலைக்கடையில் நிவாரணம் வழங்கப்படும் நிலையில் ஆண்கள் பெண்கள் என வரிசையில் நின்று அரசு நிவாரண உதவி தொகை 6 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர்….
ரூ 6000 டோக்கன் விநியோகம்

குரோம்பேட்டை 38வது வார்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூபாய் 6000 வழங்குவதற்கான டோக்கன் ரேஷன் கடைஊழியர்களால் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பயனாளிகளுக்கு வழங்கி பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் சி.ஆர்.மதுரைவீரன், சந்திரசேகர்.
Chrompet 17 December 2023
ராதாநகரில் ஆக்ரமிப்பு

குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோயில் தெருவில் பொது இடத்தை தனியார் நிறுவனம் சிமெண்ட தளம் அமைத்திருக்கும் காட்சி. இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் கூறும் போது ஏன் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் இப்படி தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் தரைகள் அமைப்பதை அப்புறப்படுத்துவதில்லை என்று தெரிய தெரியவில்லை? நகர அமைப்பு பிரிவு அலுவலர்களிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. இப்படி பொது வழியை தனி நபர்கள் ஆக்கிரமிப்பது பொதுமக்களுக்கு […]
குரோம்பேட்டையில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்னை மண்டலம் மற்றும் மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற (டேபிள் டென்னிஸ்) மேசைப் பந்தாட்டம், குண்டு எறிதல், தொடரோட்டம், தடைகளைத் தாண்டி ஓடும் தொடரோட்டம், சிலம்பம், மற்போர் முதலான போட்டிகளில் பங்கேற்று 13 பதக்கங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் மற்றும் இரண்டு மாணவர்கள் மாநில அளவிலான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.