தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மேற்கு பகுதியில் திரு வி க நகரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் 107 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு திரு.R. செல்வராஜ் அஸ்தினாபுரம் பகுதி கழக துணை செயலாளர் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
குரோம்பேட்டை நேரு நகரில் அனுமன் ஜெயந்தி விழா

குரோம்பேட்டை நேரு நகர் குமரன் குன்றம் ஸ்ரீ பிரசன்ன யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா தாரனை காட்டப்பட்டது மாலையில் அனுமனுக்கு வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்
குரோம்பேட்டை ராதா நகரில் அனுமன் ஜெயந்தி விழா

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கும்ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரம் செய்து ஆஞ்சநேயர் ஆலயத்தின் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயரின் உள்பிரகாரத்தில் வடை மாலைகள் சாற்றப்பட்டு பாதாம் முந்திரி ஏலக்காய் திராட்சை கிராம்பு மற்றும் உலர் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதை சுற்றுவட்டாரத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் […]
குரோம்பேட்டையில் உடல் உறுப்பு தானம் மராத்தான் போட்டி

நண்பர்கள் அர்ப்பண மன்றம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குரோம்பேட்டையில் 5 கி.மீ தூரம் மாரத்தான் போட்டி நடத்தியது. அதிகாலை முதல் திரண்ட ஆண்கள், பெண்கள் இருதரப்பிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட நிலையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஜி.எஸ்.சாலை, சி.எல்.சி சாலை, பச்சைமலை, துர்கா நகர் வழியாக மீண்டும் குரோம்பேட்டை பேரூந்து நிலையம் […]
தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் ஓடவில்லை.

தமிழகம் முழுவதும் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையால் சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் மட்டும் சுமார் 600 முதல் 900 பேருந்துகள் ஓடவில்லை. மேலும், கருணை அடிப்படையில் 13 ஆண்டுகளாக வாரிசுகளுக்கு பணி வழங்கப்படவில்லை – CITU சவுந்திரராஜன் தகவல்.
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
முதல் நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியதுசென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல்நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது

100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தகவல்
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு. சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம். விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஃபெரோஸ் கான் அப்துல்லா நியமனம். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தீஸ் நியமனம்.ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம். மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம். தேனி எஸ்.பி டோங்கரே […]
Chrompet 07 January 2024
குரோம்பேட் கல்சுரல் அகாடமியின் 55ஆம் ஆண்டு மார்கழி மஹோத்ஸவ இசை விழாவில் பாடகி J.B. கீர்த்தனா குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.