குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை மே மாதம் திறப்பு

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகளை அதிகாரிகளுடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு, மே மாதம் துவக்கத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என தகவல் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகள் நடைபெரும் நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் இணைக்கும் பகுதி வரைப்படத்தை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெளியிட்டனர். இதனையடுத்து பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவிக்கையில் ராதாநகர் ரெயில்வே […]
முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 130-வது பிறந்த நாள் விழா குரோம்பேட்டை, ராதாநகர் மெயின்ரோட்டில் கொண்டாடப்பட்டது

நிகழ்வில் பல்லாவரம் நகர ரெட்டி நலச்சங்கத்தலைவர் கே.எம்.ஜே.அசோக் மலர் அஞ்சலி செய்தார்.
மின் கம்பங்களில் பதாகைகள் மாநகராட்சி அபராதம் விதிக்குமா- ?அறப்போர் இயக்கம் கேள்வி -?

குரோம்பேட்டை வார்டு 23,24,25,26 பகுதிகளில் கட்டுமான நிறுவனங்களால் சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மின் கம்பங்களிலும், இன்டர்நெட் சேவை கம்பங்களிலும் 300க்கும் அதிகமான விளம்பர பதாகைகள் மற்றும் அட்டைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை அந்த பகுதியை அசிங்கமாகவும்/அலங்கோலமாகவும் ஆக்குகின்றன. என அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் புகார் கூறியிருந்தார். உடனடியாக மாநகராட்சியின் மண்டலம் 2 & 3 நகர அமைப்பு ஆய்வர்கள், அலுவலர்கள் மற்றும் ராதா நகர் மின்வாரிய […]
குரோம்பேட்டை நடேசன் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்
குரோம்பேட்டை நேதாஜி நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஸ்தினாபுரம் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் இ.ராஜமாணிக்கம் தலைமையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்

விழாவில் கே.எம்.ஜே.அசோக், அழகப்பன், சதீஷ்குமார், சங்கர், காஞ்சி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குரோம்பேட்டை காந்திஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தை மாத 3வது வார வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்
chrompet 05 February 2024
குரோம்பேட்டை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்… மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து நடிகர் சந்தானம் பேட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் கண்டு களிக்க திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது நடிகர் சந்தானத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு […]