15 ஆண்டாக நீடிக்கும் ராதாநகர் சுரங்கபாதை பணி

குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.சாலைகளில் ஆடு, மாடுகள் […]

குரோம்பேட்டை சுடுகாட்டில் பயங்கர தீ விபத்து சவ ஊர்தி எரிந்தது

குரோம்பேட்டை எரிவாயு தகன மேடை அருகே தீ விபத்து தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மின்சார கேபிள்கள் எரிந்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு, பழை சவ ஊர்தி ஒன்றும் தீயில் எரிந்தது. உடல் தகனம் செய்ய வந்த பொழுது பூஜை செய்வதற்காக கற்பூரம் கொளுத்திய போது தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் தாம்பரம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

சென்னை குரோம்பேட்டையில் ஜிஎஸ்டி சாலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திடீரென திரண்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டடனர். இதனால் குரோம்பேட்டையில் இருந்து […]

வைஷ்ணவா கல்லூரி சுரங்கபாதை விரைவில் அமைக்க கோரி நலச்சங்கத்தினர், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் […]

குரோம்பேட்டை சமூக சேவகர் வி.சந்தானம் 86 மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பயணம் என்ற தலைப்பில் மலர் வெளியிடப்பட்டது

இந்த மலரை அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம், வெங்கடேஷ் வெளியிட்டார். முதல் மலரை சி.வி ராஜகோபால் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நங்கநல்லூர் ராமராவ், சிட்லப்பாக்கம் விஸ்வநாதன், தாம்பரம் சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்கள்.மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இறுதியில் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேசன் சிறப்புரை ஆற்றிய பிறகு வி.சந்தானம் ஏற்புரை ஆற்றினார். வக்கீல் ராமதாஸ் நன்றி கூறினார்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் அடுத்த மாதம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் நடைபெற்ற அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாமில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டபட்டு அடுத்த மாதம் திறக்கபடும் என சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தெரிவித்தார். சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு கழக திமுக சார்பில் அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாம், பல்லாவரம் […]