அஸ்தினாபுரம் இறைச்சி கடையால் சுகாதார சீர்கேடு

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் இறைச்சி கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது..தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், வார்டு 38, டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் த மீட் சாப் என்ற பெயரில் இறைச்சி கடை அமைந்து உள்ளது.இந்த கடையை மதியம் மூன்று மணிக்கு அடைக்கிறார்கள், அப்பொழுது கடையில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியில் வைத்துவிட்டு செல்கிறார்கள்.இரவு குப்பை வண்டி வந்து தான் கழிவுகளை எடுக்கிறார்கள் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தப் பகுதியில் நடந்து செல்லவோ நிற்கவோ […]
குரோம்பேட்டை நேருநகர், ஸ்ரீ அய்யாசாமி அய்யர் துவக்க பள்ளியில் சென்றவாரம் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பறை செயல்பாடுகளான கதை, நாடகம், தனிநடிப்பு, உரையாடல், பாடல், கும்மி, வில்லுப்பாட்டின் மூலம் எண்ணும், எழுத்தும் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் முன் சிறப்பாக நிகழ்த்தி காட்டினார்கள். பெற்றோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

09/03/24 (சனிக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.R.கார்த்திக் [CEO – R.K. Groups] மற்றும் Dr.B.ரேஷ்மி கார்த்திக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பள்ளி தாளாளர் Rev.Sr.அல்போன்சா பீட்டர் மற்றும் தலைமை ஆசிரியை Rev.Sr.செலின் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். இவ்விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் சேர்க்கை விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 7397397940/ 7200014829.
குரோம்பேட்டை நவபாரத் பள்ளியில் 21 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

நான் முதல்வன் திட்ட ஆலோசகர் டி.கலைசெல்வன்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பங்கேற்பாளர்களைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.மாணவர்கள் நடனம், நாடகம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பட்டம் வழங்கபட்டது.
Chrompet 25 Mar 2024
Chrompet 17 March 2024
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட LED வண்ண மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மணடலகுழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Chrompet 10 Mar 2024
குரோம்பேட்டை செல்போன், துணிக்கடையில் ரூ.24 லட்சம் அதிரடி கொள்ளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் செல்போன் கடை, துணிக்கடையில் பின்பக்கம் துளையிட்டு 24 லட்சம் மதிப்புள்ள செல்போன், துணிகள் கொள்ளை சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை மொபைல் பிளாசா எனும் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையை நடத்திவந்தவர் தமிம் அன்சாரி, நேற்று வழக்கம்போல் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க முயன்றபோது கடையின் பின்பக்கம் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 20 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள் கொள்ளை போனது […]
குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு இன்று மாலை 5 மணிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்துகல்லூரி நிர்வாகம் 7 மணியளவில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் இரண்டு வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். […]