குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன ஹோமம்

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி சபாவினர் வெகு விமர்சையாக செய்திருந்தனர்.
குரோம்பேட்டையில் இரு சக்கர வாகனங்கள் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

குரோம்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி சென்னை அடுத்து சேலையூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (25). இவர் குரோம்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை வேலை முடிந்து ஹரி பிரசாத் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை டிபி மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் திரும்பும் போது தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கி […]
Chrompet 15 Apr 2024
குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன ஹோமம்

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும் 9 மணிக்கு சங்கல்பம் 10மணிக்கு அனுக்ஷை புண்ணியாக வாசகம் கும்ப பூஜை 11:30 மணிக்கு ஹோமங்கள் 12 30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்று ஒரு மணிக்கு மகா தீபாரணை செய்யப்பட்டு பக்தகோடிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு […]
Chrompet 07 April 2024
குரோம்பேட்டையில் 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழப்பு

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடுத்து அடுத்து ரயில் மோதியதில் இருவர் உயிரிழப்பு சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் சடலம் கிடப்பதாக இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில், ஒருவர் சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும் மற்றொருவர் […]
பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]
சாலைக்கு இடையூறான தண்ணீர் தொட்டி

குரோம்பேட்டை ராதா நகர் (24வது வார்டு) வெங்கடேஸ்வரா தெருவில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குடிநீர் நிரப்புவதில்லை. இந்த தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பள்ளி மாணவர்களின் வாகனங்கள் அடிக்கடி செல்லும் இந்த பகுதியில் தண்ணீர் தொட்டியை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சிக்கு அந்த பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குரோம்பேட்டை குமரன்குன்றம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பவித்ரா கேட்டரிங் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 96771 97751 (புகைப்படம்: விசு)