குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. நாள் தோரும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார். கடும் கோடை வெயில் நிலவுவதால் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக அங்கு பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்து குளிர்ச்சி […]

குரோம்பேட்டை அமல அன்னை ஆலய தேர் பவனி

200 ஆண்டுகள் பழமையான குரோம்பேட்டை அமல அன்னை ஆலைய தேர் திருவிழா, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமல அன்னை தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைத்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அமல அன்னை ஆலையத்தில் தேர் திருவிழா இன்று நடை பெற்றது. முன்னதாக அருள் முனைவர் பிரன்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில் திரளானவர்கள் முன்னிலையில் வண்ண வண்ண மலர்களால் அளங்காரம் செய்யப்பட்ட அமல அன்னையின் […]

சங்கர் கன்ஸ்ட்ரக்க்ஷன் உரிமையாளர் திரு. சங்கரநாராயணன் தம்பதியரின் குமாரன் திருவளர்ச்செல்வன் கிருத்திக்ஹரிகரன் உபநயன விழா

ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள புதிதாக திறக்கபட்ட ஸ்ரீசாஸ்தா மஹாலில் இன்று காலை நடைபெற்றது .பத்மநாப நகர் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]

குரோம்பேட்டை குமரன் குன்றம் நேரு நகர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், யோக நரசிம்மர், தாயார் சிறப்பு பழக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தபோது எடுத்த படம்

குரோம்பேட்டை குமரன் குன்றம் நேரு நகர் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பழக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தபோது எடுத்த படம் (உள்படம் ராமநவமி அலங்காரம்)