குரோம்பேட்டையில் துப்பாக்கி, கை விலங்குடன் மோசடி போலீஸ் கும்பல் கைது

குரோம்பேட்டையில் மருந்து விற்பனையாளரை போலீஸ் என கூறி துப்பாக்கி கை விலங்குடன் மிரட்டி 50 லட்சம் பறிக்க முயன்ற கும்பல் பிடிப்பட்டது.இதற்கு உதவிய வக்கீலும் பிடிபட்டார். குரோம்பேட்டையை சேர்ந்த மருந்து விற்பனையாளர் அசாரூதின்(32) மொத்தமாகவும், சில்லறையாகவும் மருத்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்துள்ளார். அதே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக தலைமை அலுவலர் இம்ரான்(28).இவருக்கு அசாரூதின் தொழில் மீது ஒரு கண் விழுந்தது, அவரை துரத்திவிடவும் அல்லது மிரட்டிபணம் பறிக்க திட்டமிட்டார். […]

மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா

குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா வருகிற ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாலை 4 மணி அளவில் விழா நடத்தப்படுகிறது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை மாத சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி […]

ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மகா கணபதி யாகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது

குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் மகாகணபதி மூல மந்திர சதூர் லட்ச ஜப ஹோம பெருவிழா நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த யாகத்தில் 8 ஆச்சார்யார்களை கொண்டு 1008 மோதகத்தால் யாகம் செய்தால், வேண்டிய வரம் கிடைக்கும். எனவே ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு லட்சம் ஜெபமும் பத்தாயிரம் […]

சென்னைக்கு வந்துள்ளது தாழ் தள பஸ்!

ராஜஸ்தானில் இருந்து சென்னை குரோம்பேட்டை பணிமைனைக்கு இரண்டு பஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீல நிறத்திலான இந்த பேருந்தில் 70 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.35 இருக்கைகள் உள்ளன. தற்போது ஆர்.டி.ஓ உள்ளிட்ட சில நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் முதல் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.கார்மேகம் பட திறப்பு விழா.!

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் காங்கிரசின் மூத்த தலைவர் பா. கார்மேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85. அவரது திரு உருவ பட திறப்பு விழா குரோம்பேட்டைநெமிலிச்சேரியில் உள்ள முத்துசாமி நகர் மெயின்ரோட்டில் உள்ள முன்னாள் பல்லாவரம் நகரசபை உறுப்பினர் அவரது மூத்த மகன் G. செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி. ஆர் .சிவராமன்.தாம்பரம் […]