மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற வரலாற்று நாடக விழாவில் சின்னதிரை நடிகர் குரோம்பேட்டை புகைப்பட கலைஞர் விசுவிற்க்கு குழுவினர் சார்பில் சால்வை அணிவித்து,

முக்கிய விருந்தினர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் பாராட்டி பேசியபோது எடுத்தபடம்.

குரோம்பேட்டையில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ராதா நகரில் உள்ள அவரது சிலைக்கு பி. பழனி, பி.தேவராஜன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் குரோம்பேட்டை வணிகர்சங்கம் பி.ராமகிருஷ்ணன், எஸ்.மீனாட்சி சுந்தரம், ராஜாராம், ராமசுப்பு, ஜி.செல்வகுமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

காமராஜரின் சிலைக்கு நாடார் சங்கங்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் தலைவர் மதிவாணன், பொருளாளர் சேகர், பொதுச் செயலாளர் முருகேசன், செயலாளர் வெற்றிவேல் முருகேசன், முருகேசன் பாக்கியராஜ், மோரிஸ், நாச்சியார் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா

குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாதர் சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி முத்துகிருஷ்ணன் அரங்க ஜோதி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

குரோம்பேட்டை புருஷோத்தன் நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்