பல்லாவரத்தில் 300 திருச்சபைகளுக்கான கல்லறை நிலத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த 300 சபைகளைச் சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட சபைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றரை லட்சம் சபை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கென இருக்கும் சிறு அளவிலான கல்லறைகள் நிரம்பி வழிவதால் குறுகிய காலத்திற்குள் மீண்டும் மீண்டும் ஒரே குழியைத் தோண்டும் அவலநிலை நீடித்து வருகிறது.குடும்பக் […]