சிட்லபாக்கம் 43-வது வார்டு இராமலிங்க அடிகளார் தெருவில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் குப்பையும் கூடமாக புதர் மண்டியும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது

இந்த இடத்தை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி. ஜெகன் தனது சொந்த முயற்சியால் ஜேசிபி வாகனத்தை வைத்து சுத்தம் செய்தார் சுத்தம் செய்த பின் இந்த இடத்தை அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் மற்றும் பொழுதுபோக்காகவும் பயன்படுத்தி வந்தால் மீண்டும் இந்நிலைமை ஏற்பாடாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினரை அப்பகுதிவாள் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

குப்பை மேடாக மாறும் சிட்லபாக்கம் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் மேல் பொதுமக்கள் அதிருப்தி

தாம்பரம் மாநகராட்சி சார்பில் குப்பை எடுப்பதற்கு தனியாக ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளில் பொதுமக்கள் மரம் வளர்க்கின்றனர் ஆனால் மரத்தில் இருந்து வரும் மரக்கழிவுகளை எடுப்பதற்கு ஊழியர்கள்பணம் கேட்கின்றனர். வீட்டிற்கு வெளியே கொண்டு போய் மரக்கழிவுகளை வைத்தாலும் அபராதம் விதிப்போம் இல்லை என்றால் அதை எடுப்பதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.இதனால் பொதுமக்கள் இனிமேல் வீடுகளில் மரம் வளர்ப்பதை விட்டு விடுவார்கள் போல் தெரிகின்றது.இப்போது இலையுதிர் காலம் என்பதால் சாலைகளில் நிறைய மரங்களில் இருந்து விழும் இலைகள்காய்ந்து […]

சிட்லபாக்கத்தில் புதிய கால்நடை மருத்துவமனை உருவாகிறது

சிட்லபாக்கத்தில் 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிகல்நாட்டி பணிகளை துவக்கினார். சிட்லப்பாக்கத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டுவந்தது. இந்த நிலையில் அதே வளாகத்தில் புதியதாக 90 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டும் பணியை தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கினார். மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ், ஜெகன், கால்நடை மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் […]

தாம்பரம் மாநராட்சி 34வது வார்டு சிட்லபாக்கம் பகுதி குமார் அவென்யூ அறிஞர் அண்ணா பூங்கா புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் சார்பில் பூங்காவை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி டீன் வி.ரேவதி, லயன்.விக்டோ பிளாக்கா, முன்னாள் கவுன்சிலர் பிரதாப் , 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் கலந்து கொண்டார்கள்.

சிட்லபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழுவினர் இணைந்து இந்த விழாவை நடத்தினார்

காலையில் விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. விழாவில் சிட்லபாக்கம் சி.ஜெகனை வாழ்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சரவணன் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் வில்லியம், முன்னாள் மாணவர் எல்.என்.ரகுராஜ் வழக்கறிஞர், சிவகுமார், ரோட்டரி கலை கோவிந்தராஜ், ரோட்டரி முத்துசாமி, பிரதாப், ஜீவா எஸ்எம்சி தலைவர், சொக்கலிங்கம், சுகுணா, எஸ்எம்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.

சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் கூலி வேலை செய்யும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இதனை அறிந்த நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் மற்றும் பரிமளா சிட்டிபாபு அவர்கள் மற்றும் திரு.பா.பிரதாப் அவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திர்க்கு உடுப்புகள் மற்றும் பண உதவி அளித்ததுடன் மன தைரியம் கொடுத்தனர்.

சிட்லபாக்கம் பிரதான சாலை மற்றும் பாபு தெரு சந்திப்பில் இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பம் நீண்ட நாட்களாக பழுதடையும் சூழ்நிலையிலும் சிறிது சிறிதாக சாய்ந்து கொண்டும் இருந்தது

மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால் 3 பிரிவுகளுக்கு உட்பட்ட இந்த மின் கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் சி.ஜெகனுக்கும், மினவாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

சிட்லபாக்கம் பிரதான சாலை மற்றும் பாபு தெரு சந்திப்பில் இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பம் நீண்ட நாட்களாக பழுதடையும் சூழ்நிலையிலும் சிறிது சிறிதாக சாய்ந்து கொண்டும் இருந்ததது

மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால் 3 பிரிவுகளுக்கு உட்பட்ட இந்த மின் கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த செம்பாக்கம், சிட்லபாக்கம், நேரு நகர் ஆகிய மூன்று மின் பிரிவுக்கும் உட்பட்ட உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர் அசோகன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிவராமன் ஆகிய அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் நன்றி தெரிவித்தார்.

சிட்லபாக்கத்தில், கோமதி நகர், அம்பேத்கர் நகர், SBI காலனி, திருமுருகன் சாலை, ராமகிருஷ்ணாபுரம், ஆகிய நியாய விலைக் கடைகளில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.6000/- வழங்கப்பட்டு வருவதையும், நிவாரண உதவித் தொகை கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

உடன் மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.