சிட்லபாக்கத்தில் 50 பவுன் நகை கொள்ளை

சிட்லபாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை கொள்ளை சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ரங்கராஜ் (வயது-67) அவரது மனைவி ஹேமலதா (வயது-63) இவர்களின் மகனான ஆதித்யா (வயது-38) இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது-30) இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் சென்றுள்ளனர். […]

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள். இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.எம்.டேனியல் 39வது வடக்கு வட்டக் செயலாளர் பா.வேதகிரி, வட்ட பொருளாளர் போர்வெல் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தலை முன்னிட்டு கால்வாய் சீரமைப்பு

சிட்லபாக்கம் கக்கன் தெரு பகுதி திருப்பத்தில் பல மாதங்களாக மழை நீர் வடிகால் பகுதி சேதம் அடைந்து சாலையில் பாதி அளவுக்கு பள்ளம் விழுந்து இருந்தது. இது பற்றி ஜி.எஸ்.டி ரோடு நியுஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது தேர்தல் வருவதையொட்டி அந்த பகுதியில் சிமெண்ட் தடுப்பு அமைத்து சரி செய்துள்ளனர். மேலும் அந்த வழியில் உள்ள சாலைகளில் குண்டு குழிகள் எல்லாம் சிமெண்ட் கலவையால் நிரப்பப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு எம்.பி சிட்லபாக்கம் பகுதியில் குடியிருக்கும் நலசங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் சர்வமங்களா நகர் சங்கத்தினரும் கலந்து கொண்டு தெரு நாய்கள், மாடுகள் பிரச்சனை, சிட்லப்பாக்கம், செம்பாக்கம் சாலை போக்குவரத்து நெரிசல், செம்பாக்கம் ஏரி தூய்மையாக்குதல், பச்சை மலை மழை நீர் கால்வாய் நீர் ஏரிகளுக்கு வர வேண்டிய கோரிக்கை அனைத்தையும் டி.ஆர்.பாலுவிடம் மனுவாக கொடுத்தனர்.

சிட்லபாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

இதனை தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கேள்வி எழுப்பினார்.. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா இதனை பரிசீலித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு,.எஸ்.ஆர்.ராஜா எம்.எல் ஏ வழிகாட்டுதலின் படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் இது விநியோகிக்கப் படுகின்றது. பாலாற்றுத் தண்ணீர் […]

போதை பொருளுக்கு எதிராக சிட்லபாக்கத்தில் அதிமுக மனித சங்கிலி

இளைஞர்களை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போதை பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலையில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. போதை பொருட்களை திமுக அரசு தடுக்க வேண்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு […]

சிட்லபாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பரிமளா சிட்டிபாபு, இ.மனோகரன், பா.பிரதாப், ஆர்.கே.புரம் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் லயன் சங்கம் சார்பாக தலைவர் புகழேந்தி தலைமையில் 324L மாவட்டம் முன்னாள் உடனடி ஆளுநர் சி.ஜெகன் ஏற்பாட்டில்

பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிட்லபாக்கம் கலைவாணர் பூங்கா மற்றும் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் மேலும் முக்கிய தெரு ஓரங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை சுற்றி இரும்பு கம்பிகளிலான வேலிகளை உடனடியாக வைத்து பாதுகாப்புடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிட்லபாக்கத்தில் வேகத்தடையில் வாகன மோதி தொழிலாளி பலி

சிட்லபாக்கத்தில் வேகத்தடை காரணமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார். முறையாக வேகத்தடை, எச்சரிக்கை கோடுகள் அமைக்க வில்லை என சாலை அமைத்த ஒப்பந்ததார், மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது, சிசிடிசி காட்சி உள்ளது. சேலம் மாவட்டம் தலவாசல் அடுத்த வீரனூர் பகுதியை பூர்விகமா கொண்ட கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (34), இவர் மனைவி சந்தோசம், இரண்டு மகன், ஒரு மகளுடன் சிட்லப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். […]

சிட்லபாக்கத்தில் கழிவறையில் கால் சிக்கியதால் தவித்த சிறுமி

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் 10 வயது சிறுமியின் கால் கழிவறையில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், பாபு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரின் 10 வயது சிறுமி இன்று காலை பள்ளி செல்வதற்காக கிளப்பியுள்ளார். முன்னதாக கழிவறைக்கு சென்ற சிறுமியின் வலது கால் கழிவறையில் மாட்டிக் கொண்டது சிறுமி கதறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு கழிவறைக்கு சென்று பார்த்த […]