குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க பேரீச்சம் பழம்

பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த […]
தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டனர். செரப்பணஞ்சேரி பகுதியில் அரசுப்பள்ளியில் பயின்ற 6ம் வகுப்பு மாணவர்கள் மாயமான நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டனர்.
மேஜிக் செய்து குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிய பிரதமர் மோடி!

எக்ஸ் சமூக வலைதளத்தில் ‛ குழந்தைகளுடன் குழந்தையாக மாறுகிறார் மோடி ‘ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பா.ஜ., வெளியிட்டது. அந்த வீடியோவில், சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோர் மோடியை சந்தித்து உள்ளனர். அப்போது, அவர்களின் காதை பிடித்து விளையாடிய மோடி, பிறகு அந்த குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் வகையில், காசு ஒன்றை வைத்து மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, எப்போது, […]
குழந்தைகளுக்கு இதெல்லாம் கற்றுக் கொடுங்கள்

குழந்தைகளை தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். எழுந்தவுடன் படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்து, மடித்து வைக்கவும், இரவு தூங்கும்போது விரிப்புகளை தாங்களே போடவும் பழக்க வேண்டும். காலைக் கடன்களை செய்வது, பல்துலக்குவது, காலையில் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உணவை சிந்தாமல் சாப்பிட கற்றுத்தரவும்.
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க டிப்ஸ்

குழந்தைகளின் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி படிப்பில் சிறந்தவர்களாக எளிதில் மாற்றலாம். புத்தகத்தில் உள்ள விஷயங்களை, வேடிக்கையான முறையில் கற்றுக்கொடுங்கள். அறிவியல் அருங்காட்சியகம், கலைக்கூடம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கிக் காட்டுங்கள். ஒரு விஷயத்தை காட்சிப்படுத்துவதன் மூலம், வேகமாக நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத் தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு. தொழில்முறை கல்வி – ரூ.50,000; கலை – அறிவியல், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலுவோருக்கு ரூ.25,000 ஆக உயர்வு. உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-24 கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசாணையில் தகவல்.
குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்

குழந்தை பருவ உடல் பருமனுக்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெற்றோர்தான் உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.இந்தியாவில் சுமார் 1 கோடியே 40 லட்சம் குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள். உடல் பருமன் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். குழந்தைகளை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலமாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை பருவத்திலேயே […]