சகோதரனைக் காப்பாற்றிய 8 வயது சிறுமி

பெங்களூருவின் குஜ்ஜங்கி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வரும் ஜிதேந்திரா – ராஜகுமாரி தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் சாலு என்ற மகளும், ஹிமாம்சோ என்ற மகனும் கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவன் தவறி உள்ளே விழுந்தான். உடனடியாக வீட்டில் இருந்து லைப் ஜாக்கெட்டைப் போட்டு கிணற்றுக்குள் குதித்த சாலு, தம்பியைக் காப்பாற்றினார்.
பல்லாவரம் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது

சென்னை பழைய பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமியை அதே குடியிருப்பு கீழ் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்க்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்க்கு சென்றுவிட்டு வருவதாக தனது மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்திற்க்கு சென்ற செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் அம்மன் நகர் திரிசூலத்தை சேர்ந்த அறுபத்தி மூன்று (63) வயதான ராமமூர்த்தி என்பவர் […]