மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்க உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல். மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு முதல்வர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளிடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பட்னாவிஸ் முதல்வராக தேர்வு..
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி

சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் டெல்லியில் இன்று சந்தித்து பேசினர்
மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு

தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு. சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக மோகன் யாதவ் பதவி வகித்தார்.
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு டியோ சாய் தேர்வு!

பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இவர், மாநிலத்தின் 4வது முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இவர்,★2 முறை எம்.எல்.ஏ(1990-98)★4 முறை எம்.பி(1999-2019)★7 ஆண்டுகள் பாஜக மாநிலத் தலைவர்★மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
சத்தீஸ்கரின் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது
மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார்

மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்து ஹோமா பதவியேற்றார். லால்டுஹோமாவுக்கு 74 வயதாகிறது, இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இவா் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது; யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தற்போதைய நிலை தொடரும் என மத்திய அரசு தெரிவித்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். டெல்லிக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம் – முதல்வர் ரங்கசாமி.