தாம்பரத்தில் 500 மாணவர் பங்கேற்ற செஸ் போட்டி

தாம்பரத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தாம்பரத்தில் ஜி.எம் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்கபோட்டிகள் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர்,வேலூர், திருச்சி,திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 8வயது 10வயது,13வயது,மற்றும்25 வயதுடைய சுமார் 500 கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் […]

செஸ் ஒலிம்பியாட் – பெண்கள் பிரிவிலும் இந்திய அணி தங்கம்

ஹங்கேரியில் நடைபெறும் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தல். அஜெர்பைஜான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், ஹரிகா, வந்திகா அக்ரவால் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் தங்கம் உறுதியானது. ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை.

பெரும்பாக்கத்தில் மாநில சதுரங்க போட்டி

பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8-வயதிலிருந்து 16-வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது. இந்த சதுரங்க போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் தொடக்கத்தில் மாணவர்கள் 8 வயதிற்கு கீழ், 10 வயதிற்கு கீழ், 12 வயதிற்கு கீழ், 16 வயதிற்கு கீழ் என 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தலா ஆறு சுற்றுகள் விளையாடினர். இந்தியாவின் 80-வது கிராண்ட் […]

ஸ்ரீ ஹயகிரீவர் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பா.பிரதாப் Ex.Mc, ஆகியோர் கோப்பையை வழங்கினர். அருகில் பவித்திரா ஜெகன்

மப்பேட்டில் சர்வதேச சதுரங்க போட்டி 530 வீரர்கள் பங்கேற்பு

தாம்பரம் அடுத்த மப்பேட்டில் உள்ள சியோன் இண்டெர்நேஷனல் பள்ளியில் இன்று முதல் 4 நாட்கள் உலக தரவரிசை புள்ளிகளுக்கான சதுரக போட்டிகள் துவங்கியது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து வயதுடைய 530 சதுரங்க போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதல் நாள் போட்டியை பெண் கிரண்ட் மார்ஸ்டர் சவிதா ஸ்ரீ, சியோன் கல்வி குழு தலைவர் விஜயன் ஆகியோர் முதல் நகர்தலை நகர்த்தி போட்டியை துவக்கிவைத்தனர். ஒரு நாளுக்கு இரண்டு போட்டிகள் என நான்கு நாட்களில் 8 […]

செஸ் உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“பிரக்ஞானந்தாவின் சாதனையை கண்டு ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்கிறது” தோல்வியடைந்த போதிலும் உங்களின் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது. உங்களது வெள்ளிப் பதக்கம் வருங்கால தலைமுறைக்கு ஊக்கம் தரும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செஸ் உலக கோப்பை: முதல் சுற்று டிரா

செஸ் உலக கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகப்புகழ் பெற்ற முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன்-ம் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா-வும் மோதினர். இன்று நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியான இரண்டாம் சுற்று நாளை நடைபெறுகிறது.