சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்

குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது

ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.25 உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சுமார் ₨5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை துவங்க மாநகராட்சி திட்டம்