விமான பயணத்தில் கேட்க கூடாத வார்த்தை
மேடே (Mayday): விமான பயணங்களின்போது நீங்கள் ஒருபோதும் கேட்கவே கூடாத வார்த்தை இதுதான். இன்ஜின் முழுமையாக செயலிழப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர சூழல்களில், பைலட்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். m’aidez என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து மேடே என்ற வார்த்தை உருவானது. ‘உதவி செய்யுங்கள்’ என்பதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம் ஆகும். உயிருக்கு ஆபத்தான அவசர சூழல் என்றால், ரேடியோ கால் தொடங்கும்போது, பைலட்கள் இந்த வார்த்தையை கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும். […]
ரூ.250 கோடியில் பிரமாண்ட வீடு கட்டிய பிரபல ஹீரோ
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிக ரான ரன்பீர் கபூர், கடைசியாக நடித்து வெளியான ‘அனிமல்’ படம் ‘ஹிட்’ அடித்த துடன், ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியது. இவரது மனைவி ஆலியாபட்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருக்கும் ராகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி மும்பை யில் முக்கிய பகுதியாக திகழும் பாந்த்ரா வில் 6 மாடி கொண்ட பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்த […]
கேரவனுக்குள் நடிகர் தனுஷ் என்ன செய்வார் – அமலாபால் வெளியிட்ட தகவல்
நடிகர் தனுஷ் குறித்த ஒரு தகவலை, நடிகை அமலாபால் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது, வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த போது, இருவரும் கேரவனில் ஒன்றாகவே சாப்பி டுவோம். தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக் கிறார். ஆனால், அவர் நிறையவே சாப்பிடுவார். அவர் சைவமாக இருந்தாலும், முட்டை மட்டும் விரும்பி சாப்பிடுவார். அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். எனவே சாப்பிடும்போது கேரவ னில் இருக்கும் டி.வி.யில் கவுண்டமணி நகைச் சுவை காட்சிகளை போட்டுவிடுவார். அதை பார்த் துக்கொண்டேதான் […]
காசி விஸ்வநாதர் கோயிலில் 21 போலி பண்டிதர்கள் கைது
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது.ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் . இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூபாய் 5000 வரை வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூரி மோசடியில் ஈடுபட்டதாக 21 போலி பண்டிதர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
25 ஊழியர்களுக்கு புத்தம் புது கார் வழங்கி இன்ப அதிர்ச்சி அந்த நிறுவனம்
சென்னை ஓ.எம்.ஆர் சாலை பெருங்குடியில் செயல்படும் அஜிலிசியம் எனும் உயிரியல் அறிவியல் நிறுவனம் துவங்கி 10வது ஆண்டு விழாவையொட்டி அவர்களிடம் பணியாற்றும் ஆரம்பகால பெண் ஊழியர் உள்ளிட்ட 25 ஊழியர்களுக்க் 5கோடி மதிப்புள்ள 25 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யூ.வி கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தது பெரும் ஊழியர்கள் அனைவரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இன்று நிறுவனத்தில் பாராட்டு விழா என ஊழியர்கள் அழைக்கப்பட்ட நிலையில் தீடீரென அந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ்பாபு அறிவித்து அவர்களுக்கு […]
டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்
ராஜஸ்தான் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.கணவர் லண்டனில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி தனது வேலையை ராஜினாமா செய்த விட்டு குழந்தைகளுடன் வெளிநாடு செல்ல இருந்த சமயத்தில் தான் உள்ளத்தில் பலியாகிவிட்டார்
ஜுலையில் அறுபடை வீடு தரிசனத்திற்குக் கட்டணமில்லா பயணம்
அறுபடை வீடு கட்டண மில்லா பயணத்திற்கு 2 ஆயிரம் பேர் 5 கட்டமாக அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். முதல் கட்ட பயணம் ஜூலை யில் தொடங்க இருக் கிறது.இந்த ஆண்டிற்கான முதற் கட்ட அறுபடை தரிசன பய ணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது.அறுபடை தரிசனத்தை தொடர்ந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில் கள் தரிசன பயணமும் தொடங்க இருக்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடி – ஐ.நா. தகவல்
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா. சார்பில் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அதன்பிறகு மக்கள்தொகை குறையத் தொடங்கும். 14 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாகவும், 10 […]
ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலமாக பிசிசிஐக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் 500 கோடி ரூபாயை பெற்றது பிசிசிஐ. 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் 2500 கோடி ரூபாயை […]
எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி ராஜ நாகங்கள்
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே உயரமான சிகரத்தில் ஒன்றாகும்.தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 ராஜ நாகங்கள் பிடிபட்டுள்ளன.வழக்கமாக காட்டு பகுதியில் இருக்கும் இவை இவ்வாறு தொடர்ந்து பிடிபடுவது காலநிலை மாற்றத்தை குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்