கூடுவாஞ்சேரி அருகே இன்று 2 ரவுடிகள் சுட்டுக்கொலை. போலீஸ் அதிரடி என்கவுண்டர்

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டர் தாக்குதல் நடத்தினர். கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்தது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது. அப்போது, ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
காஞ்சிபுரம், செங்கல்பட்டு கவனம்.. 10 மாவட்டங்களில் இடியோடு மழை அடி வெளுக்கும் ..குடை அவசியம்

சென்னை: தமிழ்நாட்டில்இன்று 10 மாவட்டங்களில்கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலைஆய்வுமையம் அறிவித்துள்ளது. இன்றுமுதல் 17 ஆம்தேதி வரைக்கும் தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சியின் காரணமாக, இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வாலிபர் வெட்டி படுகொலை
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகே நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது இச்சம்பவத்தில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் வீசி அறிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை […]
செங்கல்பட்டு மாவட்டம் பனங்காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை என புகார்
புகாரின் அடிப்படையில் அன்பகம் காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது காப்பகத்தில் இருந்த 37 பெண்கள் உட்பட 59 பேர் மீட்பு காப்பகத்தில் இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதியானது. செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத், காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை அரசு புறம்போக்கு நிலத்தில் காப்பகம் செயல்பட்டு வருவதால் சீல் வைக்க உத்தரவு.