சுபமுகூர்த்த தினம் மற்றும் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை தொடர்ந்து உயர்வில் உள்ளது

மல்லிகை சில்லறை விலையில் கிலோ ₹800 ஆகவும், பிச்சி கிலோ ₹1200க்கும் விற்பனை

சர்ச்சைக்குரிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து – தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பட்டளர்கள், சிலை செய்வோர் உள்ளிட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: பேருந்துகளில் 70,000 பேர் முன்பதிவு

முகூர்த்த தினம்,விநாயகர் சதுர்த்தி ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். இந்த 3 நாட்களில் பயணம் செல்வதற்கு அரசு பேருந்துகளில் மொத்தம் 70000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருவதற்கு மட்டும் 22,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று (செப்.5) சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 15 ஆயிரம் பேர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி: சென்னை – கோவை சிறப்பு ரயில்.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 6 பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக 11:45-க்கு கோவை சென்றடையும். இதே போல் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.