உலகமே எதிர்பார்க்கும் அந்த தருணம்…. – இன்று மாலை நிலவில் கால்பதிக்கிறது ’சந்திரயான்-3’-ன் விக்ரம் லேண்டர்!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். […]

சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திராயன்-3 லேண்டர் தரையிறங்குவது தாமதம் ஆகும்

சாதகமான சூழல் இல்லையென்றால் ஆகஸ்ட்  27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படும். இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம். தேசாய் தகவல். நாளை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 மற்றும் 3 இடையே தகவல் தொடர்பு: இஸ்ரோ கொடுத்த “குட் நியூஸ்”

சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ கூறியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ம் […]

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும்: ISRO தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும் என ISRO தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு லேண்டர் விக்ரம் நிலவு மேற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ISRO, ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இணைந்து கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு. ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 153×163 கி.மீ-ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நாளை பிரிக்கப்படுகிறது; ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவு

விண்கலம் சீராக இயங்குவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் விண்கலத்தின் அடுத்தக்கட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியை நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டம் சந்திரயான் 3 விண்கலம் தற்போது 41,603 கிமீ x 226 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது – இஸ்ரோ