ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெற கோரிக்கை.

கடப்பாவில் நடந்த தனது கட்சி மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கான நன்கொடை வசூல் கூட டிஜிட்டல் முறையில் தான் பெறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் இன்று நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]

ஆந்திராவில் கட்டாய மதமாற்றம் எங்கும் இருக்கக்கூடாது என்று ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்து அறநிலையத்துறை வளர்ச்சி குறித்து நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமநாராயண ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது ஆந்திராவில் கட்டாய மதமாற்றம் எங்கும் இருக்கக்கூடாது. அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கடினமான நடவடிக்கைகளின் மூலம் கட்டாய மத மாற்றங்களை தடுக்க முடியும். அர்ச்சகர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 […]

திருப்பதியில் சந்திரபாபு நாயுடு செய்த முதல் சீர்திருத்தம்………

திருப்பதிக்கு வருகை தரும் மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி பாலாஜி 65 வயது மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி. மூத்த குடிமக்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா @ திருமலை இலவச தரிசனம். இரண்டு இடங்கள் சரி செய்யப்பட்டன. ஒன்று காலை 10 மணிக்கு மற்றொன்று மாலை 3 மணிக்கு. புகைப்பட ஐடியுடன் வயதுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் S1 கவுண்டரில் புகாரளிக்க வேண்டும். பாலத்தின் கீழ் உள்ள கேலரியிலிருந்து கோவிலின் வலது சுவருக்குச் செல்லும் சாலையைக் கடக்கவும். ஏறுவதற்கு படிக்கட்டுகள் […]

ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ஆர் பெயரிலான திட்டங்களுக்கு என்.டி.ஆர்., மற்றும் சந்திரபாபு நாயுடு பெயர் சூட்டல்

ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு உடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்

இதில் கூட்டணி கட்சிகளான ஜனசேனா கட்சியில் 3 பேருக்கும், பாஜகவில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது : சந்திரபாபு நாயுடு உறுதி

ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார். நாளை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கூட்டணி எம்எல்ஏக்களிடையே பேசிய அவர், “பொருளதார தலைநகராக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும்,”என்றார்.