டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும் தொடர்கின்றன. நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை (50.00 சதவீதம்) ஒரு இடம் உயர்ந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. தோல்வியை சந்தித்த நியூசிலாந்து (42.86 சதவீதம்) 4வது இடத்திற்கு சென்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

திருவனந்தபுரத்தில் தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவன் நிதிஷ் 8 வயது ரிuனீவீtமீ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதல் பரிசை வென்றார். இவர் பல்லாவரம்- -& 2 ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் ஆவார். மேலும் மாணவனின் கராத்தே பயிற்சியாளர் முத்து தேவராஜுக்கு மாணவனின் தாயார் கார்த்திகா நன்றி தெரிவித்தார்.
ஹாக்கி சாம்பியன்ஷிப்; 2 அரையிறுதி போட்டிகள்

7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று(ஆக.11) இரண்டு போட்டிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மலேசியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இரவு 8.30க்கு நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக மாலை 3.30க்கு நடைபெறும் 5வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.