வெள்ளரிக்காயில் மயக்கப் பொடி தூவி பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல் கைது
வேலூரில் இருந்து சென்னை தாம்பரம் சானடோரியத்திற்கு வரும் அரசு பேரூந்துகளில் திருமண முகூர்த்த தினம், அல்லது கோவில் விஷேச தினங்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை கொள்ளையடிப்பதாக 15 சவரன் நகையை பறிகொடுத்த மூன்று பெண்கள் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நகை பறிகொடுத்தவர்களிடம் முதலில் விசாரித்தபோது அருகிள் இருந்த பெண்ணிடம் இனிப்புகள், வெள்ளேரி காய் வாங்கி சாப்பிட்டபோது அரை மணி நேரம் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தால் பெண்ணையும் […]
குரோம்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

குரோம்பேட்டை கணபதிபுரம் மணி நாயக்கர் தெருவை சேர்ந்த ஜெசி ஜவகர் (வயது 60) சைதாப்பேட்டையில் பணியை முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு நடந்து சென்று வந்து கொண்டிருந்த போது கணபதிபுரம் விவேகானந்தா தெருவில் சூளைப் பகுதியை சேர்ந்த அக்பர் வயது 22 பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற போது பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.