தூத்துக்குடி ஏரலில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை

மாவட்டம் ஏரல் அருகே கடைக்குள் புகுந்து இளம் பெண்ணிடம் ஆயுதங்களை காட்டி தாலி செயினை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நகையை விற்று வைத்திருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குரோம்பேட்டை அருகே பேருந்தில் சென்ற பெண் இடம் இருந்து 14 சவரன் தங்க நகை மாயம்

தாம்பரம் குரோம்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சனா தேவி வயது 68 இவர் அசோக் நகரில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதற்காக குரோம்பேட்டையில் இருந்து 66 ஏ என்ற பேருந்தில் ஏறி அஸ்தினாபுரம் சென்றுள்ளார் அங்கு உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்ற பின் தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார் அப்போது பையில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் […]