மராத்தி, வங்க மொழி உட்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து. மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஒவ்வொரு மொழிகளைப் பேசி வருகிறார்கள். இந்த மொழிகளைக் காக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது கூடுதலாக 5 இந்திய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து […]
மெட்ரோ 2ம் கட்ட திட்டம் – மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்
இந்தியாவில் சீன சிசிடிவி நிறுவனங்களுக்கு தடை.?

மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு.
மத்திய அரசின் கடன் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரிப்பு

மத்திய அரசின் மொத்த கடன்தொகை 2024-2025, ஜூன் காலாண்டின் முடிவில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது 25 சதவீதம் உயா்ந்து ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.50 லட்சம் கோடியாக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வால் பலனடைவார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு.