சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுத சிபிஎஸ்சி புதிய கட்டுப்பாடு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75% இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பிலேயே பெயில்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ (தேர்ச்சி இல்லை) என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. […]
சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் – மண்டலவாரியாக தேர்ச்சி சதவீதம்

திருவனந்தபுரம் – 99.91% விஜயவாடா – 99.04% சென்னை – 98.47 % பெங்களூர் – 96.95% மாணவிகள் – 91.52 %மாணவர்கள் – 85.12%மாற்று பாலினத்தவர் – 50% மொத்தம் – 87.98% அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களை விட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம்

மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ. தீவிரம். இந்தாண்டு நவம்பர் மாதத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த ஏற்பாடு.
10,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இனி மதிப்பெண் சதவீதம் இல்லை: சிபிஎஸ்இ

‘10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வில் அவா்கள் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம் அல்லது ஒட்டுமொத்த தரவரிசை ஆகிய விவரங்களை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இனி வெளியிடாது’ என்று சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறினாா். மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சிபிஎஸ்இ ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், […]