“சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் “

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரவுள்ளார் கெஜ்ரிவால்.
பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு!..

முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு “பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்” மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சி.பி.ஐ. தரப்பில் வாதம்
“ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்”

பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் “தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” “உண்மை குற்றவாளிகளை கைது செய்து கொலைக்கான பின்னணியை கண்டறிய வேண்டும்” “உளவுத்துறையின் தோல்வியால் படுகொலை – உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்”
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் வைத்து கைது செய்தது CBI

கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு

அவசர வழக்காக விசாரிக்க கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு..
2011 ல் இவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வர சீன நாட்டவர்கள் 263 பேருக்கு விசா வழங்கிட கார்த்தி உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜாமின் கேட்டு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் கார்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது
சென்னையில் சிபிஐ சோதனை

சென்னை, அயனாவரம் உட்பட 2 இடங்களில் உள்ள வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சூளைமேடு பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா ஊழல் வழக்கு – சிபிஐ பதிலால் நீதிபதி அதிருப்தி

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரியை நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல் தொடர்ந்து பலமுறை இதே காரணத்தை கூறுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்