நயினார் நாகேந்திரன் ஆஜர்

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி?-சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்கொலை, கொள்ளை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் […]

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி போலீஸ்

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து 20 சாட்சியங்கள் விசாரித்து அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு, ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருந்தது.