திண்டுக்கல்லில் கார் மோதி ஒருவர் பலி
திண்டுக்கல் வாணிவிலாஸ் இறக்கம் அருகே குடிபோதையில் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி பலி, இது குறித்து நகர் மேற்கு காவல் துறையினர் விசாரணை
கார் விபத்தில் எல்ஐசி எஜெண்டு பலி

போரூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் (69) எல்.ஐ.சி ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு காரில் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதிக்கு வந்துள்ளனர். காரை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் மலையானம் (36) ஓட்டி வந்துள்ளார். பின்பு மீண்டும் நேற்று மாலை தாம்பரம் – மதுரவாயல் புறவழிசாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது அனாகாபுத்தூர் அருகே அரசு பேருந்து முந்தி செல்ல முயன்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் […]
கோவளம் அருகே கார் மோதி 3 பேர் பலி

சென்னை அடுத்த கோவளம் அருகே ஆந்திர பதிவெண் கொண்ட கார் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணியாற்றும் சந்திரசேகர், அவர் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அவர்களின் குழந்தை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு. சந்திரசேகர் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே செம்மஞ்சேரி எனும் பகுதியில் சென்றபோது ஆந்திரபதிவெண் கொண்ட கார் இருசக்கர வாகனத்தின் மீது […]
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

காரை ஓட்டி சென்ற பெண்மணி உடனே கீழே இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
‘ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்

இரண்டு மாடல் கார்களை ரஜினிக்கு கலாநிதி மாறன் காண்பித்த நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்.
சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்தால் பறிமுதல்..!!

சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவைத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நல்லிசத்திரம் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
காரை தந்தத்தால் குத்தி தாக்கிய யானை

கேரள மாநிலம், அட்டப்பாடியில் நேற்று இரவு காரை வழிமறித்து தந்தத்தால் 3 முறை குத்தித் தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், தாக்குதலை நிறுத்திய யானை திரும்பி காட்டுக்குள் சென்றது. இதனால் யாரும் காயம் ஏற்படாமல் தப்பினர். யானை தந்தத்தால் குத்தியதில் காரில் 3 பெரிய ஓட்டைகள் விழுந்துள்ளது.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நடுரோட்டில் சொகுசு கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி இவருக்கு சொந்தமாக bmw சொகுசு கார் உள்ளது. இந்த நிலையில் காரின் ஓட்டுனர் பார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் இருந்து bmw சொகுசு காரில் தாம்பரத்திற்கு சென்று கொண்டுள்ளார். அப்போது குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வந்துள்ளது. அப்போது காரை நடுரோட்டில் பார்த்தசாரதி நிறுத்தியுள்ளார். திடீரென காரில் தீப்பிடித்து. எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி காரில் […]
டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் உற்பத்தி

டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகிகள், ஒன்றிய அரசு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்தியாவில், ரூ.20 லட்சம் வரையிலான குறைந்த விலையில் டெஸ்லா கார்களை உற்பத்தி செய்து, அதை உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விற்பனையாகும் டெஸ்லா கார்களின் விலை ரூ.45 முதல் ரூ.85 லட்சம் வரை விற்பனையாகிறது.