மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு ஐசிஐசிஐ வங்கி சிட்லபாக்கம் கிளையில் டிகேஸ் ஹீல் அண்ட் க்யூர், சிட்லபாக்கம் நிறுவனர் கார்த்திக் மற்றும் டாக்டர்.திவ்யா கார்த்திக் பிசியோதெரபி விழிப்புணர்வு முகாம் நடத்தினர்

இதில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்ட்ரல் ஹஸ்தினாபுரம் எம்.ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மற்றும் கிளை மேலாளர் சிவா, துணை கிளை மேலாளர் ராஜாபிரபு மற்றும் தொடர்பு மேலாளர் ஜெயஸ்ரீ முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
தாம்பரம் போலீசாருக்கு கல்லீரல் பரிசோதனை முகாம்

உலக கல்லீரல் கொழுப்பு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர ஆணையரக காவலர்களுக்கு பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 13 உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுக்க உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக கடைப்பிடிப்பதை தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும்இலவச பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் இலவசமாக நடைபெற்றது. உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக ஜூன் […]
108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம்

இடம்: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைநாள்: 24.02.24நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை. மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள் பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜி என் எம், DMLT(12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology. வயதுவரம்பு: 19 இல் இருந்து 30 […]
மார்ச் 3 : போலியோ சொட்டு மருந்து முகாம்

பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம், மார்ச் 3ல் நடக்கிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்த, ஆரம்ப, துணை சுகாதார நிலையம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பொது இடங்களில், நடமாடும் மருத்துவக்குழு, மொபைல் வாகனம் மூலம், காலை 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்;
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தல்
சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சிக்குள்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பாக உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு இலவச நீரழிவு மருத்துவ முகாம்

நேரு நகர் குமரன் குன்றம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50&க்கும் மேற்பட்ட முதியோர்கள் பரிசோதனை செய்து பலன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் இ.ராஜமாணிக்கம் கே.எம்.ஜே.அசோக், வி.ஆர்.அழகப்பன், இ.சதீஷ்குமார், ஆர்.வி.சங்கர், ஹரிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டெங்கு போன்ற நோய்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் போதுமான அளவிற்கு உள்ளது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காலை 9.00 மணி அளவில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அதுவரை இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்- சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
மகளிர் உரிமை தொகை; 2 நாள் சிறப்பு முகாம்

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திட்ட செயலாக்கத்துறை செயலர் தினேஷ் அகமது, “மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமிற்கு மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.7.2023) தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமிற்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், துரை.சந்திரசேகரன், […]