தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு 10 வழித்தடங்களுக்கு மாநகர பேரூந்துகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார்

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 புதிய வழித்தடத்தில் மாநகர பேரூந்துகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார், பின்னர் பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் ஆகியோர் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.

குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் போதையால் தவழ்ந்து சென்ற வாலிபர்

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் நடக்க முடியாமல் பேருந்து வரும் வழியில் தவிழ்ந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானா பொதுமக்கள் பயண்படுத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் பலர் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து வரும் வழியில் படுத்து […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து பயணிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்கின்றனர்.

கிளாம்பாக்கம் 100% சதவிகித பயன்பாட்டில் இயங்குகிறது. -அமைச்சர்கள் சிவசங்கர் – சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது! கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது!

தாம்பரம் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் திரை

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் மின்னணு சுவர்திரை, அரசின் திட்டங்களை அறிந்துகொள்ள அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர். தாம்பரம் மாநகராட்சி ஜி.எஸ்.டி சாலை பேரூந்து நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்த் துறை அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்திடும் வகையில்புதிய மின்னணு சுவர்திரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற […]

தாம்பரம் பஸ் நிலையத்தில் பெருக்கி சுத்தம் செய்த மேயர்

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் அபியான் – ஸ்வச்டா ஹாய் சேவா என்ற சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி சிறப்பு தூய்மை பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றது. தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற […]