தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிறு வரை தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்தது போக்குவரத்து கழகம்

திருச்சியில் ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு

இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து டெலிபோன் கம்பத்தில் மோதி நின்றது இதில் அதிர்ஷ்டவசமாக 18 பயணிகள் உயிர் தப்பினர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு எஸ்.இ.டிசி சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து …

மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு எஸ்.இ.டிசி சொகுசு பேருந்தானது சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே மார்க்கமாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரகாசன், காஞ்சிபுரம் மாவட்டம் இடையான்புதூர் பகுதியை சேர்ந்த நடத்துனர் […]

வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுவிழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் – 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம், பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் வைத்து தள்ளி சென்ற விவகாரம் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை

சென்னையில் இருந்து கேரளா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது!

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – இருவர் உயிரிழப்பு! சென்னையில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு சென்ற தனியார் பேருந்து, திருவாழி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி; வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று கூடுதலாக 500 பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு!

நாளை, நாளை மறுநாள் மற்றும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை என்பதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை நடவடிக்கை!

பேருந்து விபத்தில் 30 பேர் படுகாயம்

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தின் அருகே உள்ள திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஆக 05) காலை, அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.