போலிஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவைச்சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல்நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்..???சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு?நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு?என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ […]
வார இறுதி நாளையொட்டி, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்!
திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம் பட்டி பகுதியில் ஹோட்டலுக்கு அரசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மேலும் இரண்டு பேர் படுகாயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே, மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டத்தால், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. ஒரு பெண்ணுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது என தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு5.90 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்ப்பு.
கொட்டிவாக்கத்தில் பஸ் மோதி பெண் பலி

சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது56) இவர் கிழக்கு கடற்கரை சாலை கொட்டி வாக்கத்தில் தங்கி வயதான முதியவர் ஒருவரை கவனிக்கும் ஆயா பணி செய்து வந்தார்.இன்று மாலை பணி முடிந்து வீடு திரும்ப வரும்போது கொட்டிவாக்கம் பஸ்நிலையம் எதிரே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த பாண்டிச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ் பத்மா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பத்மா சம்பவ […]
சென்னைக்கு திரும்ப 8,000 பேருந்துகள்

விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு. ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், வரும் புதன்கிழமை (அக்.25) வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகளை இயக்க ஏற்பாடு.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது

பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 23ம் தேதி ஆயுதபூஜை பண்டிகையும் மறுநாள் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைளுக்கு முன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர்.மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். […]
ஆயுத பூஜையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 22ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகிறது

கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கபடுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,700 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை. மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை.