கோயம்பேடா? கிளாம்பாக்கமா? – எங்கு பஸ் ஏறுவது?
விரைவு போக்குவரத்து கழகபேருந்துகள் இயக்கம் தொடர்பாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்கவேண்டும். கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும். முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (விழுப்புரம், திருச்சி மார்க்கம்) […]
ஆம்னி கட்டணம் உயர்வு

வழக்கம்போல ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இருக்கையில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. இது ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்க இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. […]
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனதால் பணிக்கு திரும்பினர்

இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.

நேற்று முதல் நீடித்த அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தகவல். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என ஒப்புதல்.
சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருடன் அண்ணா தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம்…!

“அதிமுக ஆட்சியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது நீங்கள் சொல்லித்தானே பேருந்தை இயக்கினேன், இப்போது மட்டும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்..?” – பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கேள்வி
மாநகர பேருந்துகள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அச்சமின்றி பயணிக்கலாம்
புஸ்வாணம் ஆன போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் மதுரை மாவட்டத்தில் அனைத்து வழி இடத்திலும் பஸ்கள் இயங்குகிறது
மதுரை மாவட்டத்தில் 93சதவீதத்திற்கும் மேல் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து […]
பொங்கல் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை. வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்-அமைச்சர் சிவசங்கர்.
ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்