தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]
தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]
வல்லக்கோட்டை அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ

ஓடும் பேருந்தில் தீ கொழுந்துவிட்டு எர்ந்து வருகிறது. வல்லக்கோட்டை முருகன் கோவில் அருகே, தனியார் நிறுவன ஏசி பேருந்து ஓடும்போதே தீபற்றியது. உடனடியாக நிறுவன ஊழியர்கள் கீழே இறக்கபட்டனர். தற்போது அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது….
தாம்பரத்தில் நடுரோட்டில் நின்ற அரசு பஸ், கண்டக்டர் உட்பட 3பேர் தள்ளிய வீடியோ வைரல்

தள்ளு…தள்ளு….தள்ளு….. ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்த பேருந்து 50 பயணியை வைத்து தனி ஆளாக பேருந்தை தள்ளிய நடத்துனர் உதவிக்கு வந்த இருவர் ஒரே தள்ளில் இயக்கபட்ட பேருந்து சமூக வளைதளங்களில் வைரலாகும் காட்சி! மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கு தாம்பரம், அகரம்தென் செல்லகூடிய 31A வழிதடம் எண் கொண்ட பேருந்து புறபட தயாராக இருந்தது. அப்போது அந்த பெருந்தை இயக்க முற்பட்ட ஓட்டுநர் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்தது. இதனை அறிந்த நடத்துனர் […]
சென்னைக்கு வந்துள்ளது தாழ் தள பஸ்!

ராஜஸ்தானில் இருந்து சென்னை குரோம்பேட்டை பணிமைனைக்கு இரண்டு பஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீல நிறத்திலான இந்த பேருந்தில் 70 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.35 இருக்கைகள் உள்ளன. தற்போது ஆர்.டி.ஓ உள்ளிட்ட சில நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் முதல் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை

5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட அதிநவீன பேருந்துகள்
முழு போதையில் காலையிலேயே பஸ்ஸில் ஏறி கலாட்டா செய்த பெயிண்டர்

அதிகாலையிலேயே குடித்துவிட்டு அரசு பேருந்தில் தகராறு செய்த பயணி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து. இவ்வளவு காலையில் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது போதை என மனக்குமுறலுடன் பேசிய அரசு பேருந்தின் ஓட்டுனர் கிழக்கு தாம்பரத்திலிருந்து அகரம் தென்பகுதிக்கு ஏற்றப்படும் 31-A பேருந்தில் தினசரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பயணிக்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் தங்கு தடை இன்றி கிடைக்கும் மதுபானங்களால் கூலி தொழிலாளிகள் பலர் காலையிலேயே […]
வேளச்சேரியில் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

வேளச்சேரியில் இருசக்கர வானம் மீது தனியார் நிறுவன பேரூந்து மோதியதில் இளைஞர் பலி சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிவாசன்(19) வேளச்சேரி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதிய நிலையில் இருசக்கர வாகனம் பேரூந்து கீழே சிக்கியது. இதில் ஜோதிவாசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் மெமோ

தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் உயர் அதிகாரிகள் மெமோ கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாம்பரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக நடத்துனர் ஆக இருப்பவர் சரவணன் இவர் இதுவரை ஒரு நாளும் விடுமுறை எடுத்ததில்லை இன்று தனது திருமண நாளிலும் வேலைக்கு வந்திருந்தார் ஆனால் அவரை அநியாயமாக அதிகாரிகள் வழிமறித்து மிரட்டி மெமோ கொடுத்ததாக அவரே குற்றம் சாட்டினார் அவரது பரபரப்பான பேட்டி இதோ