இரண்டாம்‌ உலகப்போரின்போது சியாம்‌ தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும்‌ பணியில்‌ உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின்‌ தியாகத்தை போற்றும்‌ வகையில்‌,பர்மா ரயில்பாதைஇரண்டாம்‌ உலகப்போரின்போது சியாம்‌ தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும்‌ பணியில்‌ உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின்‌ தியாகத்தை போற்றும்‌ வகையில்‌,

தமிழ்‌ மரபுப்படி தாய்லாந்து நாட்டின்‌, காஞ்சனபுரியில்‌ இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற “நடுகல்‌“ திறப்பு விழாவில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சார்பில்‌ மாண்புமிகு போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.எஸ்‌. சிவசங்கர்‌, மாநிலங்களவை உறுப்பினர்‌ திரு. எம்‌.எம்‌ அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின்‌ தூதர்‌ திரு.ஜோஜி சாமுவேல்‌ ஆகியோர்‌ திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்‌. இவ்விழாவில்‌ தாய்லாந்து தமிழ்ச்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ திரு. ரமேஷ்‌ தர்மராஜன்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌ கலந்து கொண்டனர்‌.