கட்டிட அனுமதிக்கு லஞ்சம் தாம்பரம் மாநகராட்சி ஆய்வாளர் கைது

கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் கைது. தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக மவுண்ட் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான சிறப்பு குழுவினர் குரோம்பேட்டை, சிஎல்சி ஒர்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை […]
தனியார் நிறுவனத்தால் இடிந்த வீடுகள் பெருங்குடி மக்கள் பீதி

பெருங்குடியில் 5 வீடுகள் மண் சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து. மேலும் பல வீடுகளில் விரிசல் பகுதி மக்கள் அச்சம். தனியார் கட்டுமான நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழியால் விபரீதம். சென்னை பெருங்குடி பர்மா காலனி திருவள்ளுவர் நகர் 10வது தெருவில் அரியண்ட் பில்டர்ஸ் நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் அருகில் உள்ள இடங்களில் மண் சரிவு […]
விமான நிலையம் அருகே 600கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிடங்கள் இடிப்பு

செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் காண்டோன் மெண்ட் பகுதியில் சென்னை விமான நிலையம் அருகே 600 கோடி அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றரை ஏக்கர் நிலம் கடந்த ஒருமாதம் முன்னர் வருவாய்துறையினரால் அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சீல்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு உத்திரவை அடுத்து அந்த இடத்தை சென்னை மெட்ரோரெயில் திட்டபணிக்காக ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சீல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் ஒரு பொக்லைன், […]
பதிவு கட்டண குறைப்பு; இன்று அமலுக்கு வருகிறது

சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனையின் போது, நிலத்தின் பிரிபடாத பங்கான, யு.டி.எஸ்., அளவையும், மதிப்பையும் குறிப்பிட்டு, கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். இதற்கு, முத்திரைத்தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 2 சதவீதம் வசூலிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, கட்டுமான ஒப்பந்தம் தனியாக பதிவு செய்யப்படும். இரு வகையான பத்திரங்கள் பதிவு செய்யும் […]
சென்னையில் 1000 சதுரஅடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான 100% அனுமதி

கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம் தொழிற்சாலைகளில் தளப்பரப்பு குறியீட்டில் 1076 அடிக்கு மேல் கட்டடப்பரப்பு இருந்தால் கட்டடங்களுக்கான அனுமதி கட்டணம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை தாற்போது கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுவதற்கான கட்டணம், ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த்தப்படவில்லை. வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் அதே குறிப்பிட்ட […]