மிசோராம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தி.நகரில் மிகப்பெரிய பாலம்; 5 நிமிடமாக குறையும் பயண தூரம்

சென்னை, தி.நகரில் கூட்ட நெரிசலை சமாளிக்க மிக நீளமான பாலம் 2024ல் கட்டப்பட உள்ளது. ஹைப்ரிட் மேம்பாலமாக அமையவுள்ள இந்த பாலம், அண்ணா சாலையை நேரடியாக சிஐடி நகர் வழியாக மகாலிங்கபுரத்துடன் இணைக்கும். இதனால் இதற்கு இடைப்பட்ட தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் ஆகும் நிலையில், மேம்பாலம் கட்டிய பின் 5 நிமிடங்களில் திநகர் டிராபிக்கை கடக்கலாம்.
பெருங்களத்தூர் புதிய மேம்பாலம் திறப்பு

பெருங்களத்தூர் மேம்பாலத்தில் ஒருபகுதி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக இருவழி சாலையுடம் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 155 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்கமாக செல்லும் விதமான மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மேம்பாலத்தில் இணைக்கும் விதமாக ரயில்வே தண்டவளத்தை கடக்கும் 24 கோடி மதிப்புள்ள ரயில்வே மேம்பாலத்தை குறு சிறு நடுத்தர தொழில் […]