பாம்பன் புதிய ரயில் பாலத்தில்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பயணிகளுடன் ரயிலை அதிகபட்சமாக 75 கி.மீ வேகம் வரை இயக்கலாம். செங்குத்து தூக்குப்பாலத்தில் மட்டும் 50 கி.மீ வேகத்தில் இயக்கப்படவேண்டும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி 100 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் பாலத்தை உயர்த்தி, இறக்க அனுமதி இல்லை. காற்றின் வேகம் 58 கி.மீ வேகத்தில் வீசினால் பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி இல்லை
பாம்பன் புதிய ரயில் பாலம்: பணிகள் அனைத்தும் ஓவர்… விரைவில் திறப்பு விழா!
ராமேசுவரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் ரயில்வே அமைச்சகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை, தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை

பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கி சோதனை நடத்தப்படவுள்ளது. செங்குத்து தூக்கு பாலத்தை முதல் கட்டமாக 10 மீட்டர் தூரம் தூக்கி அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், தாம்பரம் & வண்டலுர் இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே திட்டப் பணிகளின் கீழ் ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் து.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற […]
பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை

பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் சங்கங்கள் கோரிக்கை பெருங்க்ளத்தூரில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவி பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை […]
பல்லாவரம் மேம்பாலத்தில் மருத்துவ மாணவர்கள் கார் கவிழ்ந்து விபத்து

பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது […]
குடியால் வந்த வினை தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தாம்பரம் அருகே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பட்டேல் நகரை சேர்ந்தவர் மாதவன் (23) பி.காம் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் பெற்றோரிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் […]
தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில் மேம்பாலம் பராமரிப்பில் சீர்கேடு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில்வே இணைப்பு மேம்பாலம் பராமரிப்பில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார். தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை இணைப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த பாலம் பராமரிப்பு முறையாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அடிக்கடி அந்த பாலத்திற்கான நகரும் படிக்கட்டு அந்த பழுது அடைந்து விடுகிறது. அதை உடனடியாக யாரும் சரி செய்வது இல்லை. மேலும் […]
சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR), “U” வடிவ மேம்பாலம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR),இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள “U” வடிவ மேம்பாலத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,தலைமைச் செயலகத்தில் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர் செயல் இயக்குநர் எம்.விஜயா ஆகியோர் கலந்து […]
இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்

கேரளாவின் வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் 40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது