கட்டிட அனுமதிக்கு லஞ்சம் தாம்பரம் மாநகராட்சி ஆய்வாளர் கைது

கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் கைது. தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக மவுண்ட் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான சிறப்பு குழுவினர் குரோம்பேட்டை, சிஎல்சி ஒர்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை […]
லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட இணை இயக்குனர் […]
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா,அரசு மருத்துவரை மிரட்டி ₨.12 லட்சம் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட்

ஒரே மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி உட்பட 4 பெண் போலீசார், கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு […]
எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடல் அரிப்புத்துறை தடுக்கும் பிரிவு உதவி பொறியாளர் பாஸ்கரன் ஒப்பந்ததாரர்களிடம் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. சோதனையில் 2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 20000 லஞ்சம் தாம்பரம் கோட்டாட்சியரின் தனி உதவியாளர் கைது

வண்டலூர் அடுத்த ரெத்தினமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 61.5 செண்ட் நிலத்திற்கு பட்டா திருத்தம் செய்ய வருவாய் துறையில் மனுசெய்தார். இது குறித்தான மனு மீது நடவடிக்கை எடுக்க வண்டலூர் வட்டாட்சியர் மூலம் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமாருக்கு அனுப்ப பட்டது, இந்த நிலையில் அந்த ரவிசந்திரனிடம் தொடர்பு கொண்ட தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் முது நிலை ஆய்வாளர் ராஜா, பட்டா திருத்தம் செய்திட கோட்டாட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட கோப்பு காண்பித்து 28.6..2023 அன்று 20 […]