கோவை வெடிகுண்டு வழக்கு – 27 வருடத்திற்கு பிறகு முக்கிய நபர் கைது
கோவையில் 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் 27 வருடத்திற்கு பிறகு கைதானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. டெய்லர் ராஜா என அழைக்கப்படும் சாதிக் ராஜா கைதானதை தொடர்ந்து காவலர்கள் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.