பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் பலத்த சப்தத்துடன் மர்மப் பொருள் வெடிப்பு – 4 பேர் படுகாயம்

சிலிண்டர் வெடித்ததா, குண்டு வெடிப்பா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு

சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோயில் உள்ளே சென்று வீசிய நபர்

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது

ரவுடி மணிகண்டன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதால் திருவானைக்காவலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசி தாக்கியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா குண்டுவெடிப்பு:பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 61 வயது பெண் உயிரிழப்பு. குண்டுவெடிப்பில் காயமடைந்த 61வயது மோளி ஜொயி என்பவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குண்டுவெடிப்பில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோட்டம். நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.