கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, அருமனை, களியல், திற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் நாகை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது

சிவகங்கை என்ற கப்பல் விடப்படுகிறது.கட்டணம் நாகையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல 6600 ரூபாய் ஆகும். இதுவே இலங்கை பணமாக இருந்தால் மூன்று மடங்கு அதிக கட்டணம்.

சென்னை பெசன்ட்நகர் கடந்கரையில் 3 சோலார் பேனல் பொருத்தப்பட்ட மிதவை படகுகள் தரை ஒதுங்கியுள்ளன

மீனவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பெசன்ட் நகர் போலீசார் மிதவைகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த மிதவை மூலம் உளவாளிகளோ, தீவிரவாதிகளோ சென்னைக்குள் நுழைந்திருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

அக். 25-ல் சீன உளவு கப்பல் கொழும்பு வருகை: இலங்கை – இந்தியா உறவில் பாதிப்பா?

ராமேசுவரம்: சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி […]